ஓடிடி வந்திருப்பது சின்னப் படங்களுக்கு வரம்!- சாந்தினி தமிழரசன் பேட்டி

By காமதேனு

ரசிகா
readers@kamadenu.in

ெபரிய திரை, சின்னத் திரை என இரண்டிலும் நின்று களமாடி வருபவர் சாந்தினி தமிழரசன். ஒரு பக்கம் ஜீ தமிழில் ‘இரட்டை ரோஜா’ மெகா தொடர், இன்னொரு பக்கம் பாலாஜி சக்திவேல், ராதாமோகன் போன்ற ஆஃப் பீட் பட இயக்குநர்களின் கதாநாயகி என வலம் வரும் அவரிடம் காமதேனுவுக்காக உரையாடியதிலிருந்து...

நீங்கள் திரையுலகில் நுழைந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்படி உணர்கிறீர்கள்?

பெரிய சாதனையாக உணர்ந்து சந்தோஷப்படுகிறேன். திறமை, அதிர்ஷ்டம் ஆகியவற்றுடன் எனக்குக் கிடைத்த கதாபாத்திரங்கள் வழியாக ரசிகர்களும் திரையுலகினரும் நினைவில் வைத்திருப்பதால்தான் எனது பயணம் சிறப்பாகத் தொடர்வதாக நினைக்கிறேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE