சினிமா பிட்ஸ்

By காமதேனு

`சன் பிக்சர்ஸ்' தயாரிப்பில் விஜய் நடிக்கவுள்ள படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார் பூஜா ஹெக்டே. ‘முகமூடி' மூலம் தமிழுக்கு அறிமுகமான இவர், தொடர் வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு, ஹிந்தியில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். மீண்டும் கோலிவுட்டிலிருந்து அழைப்பு வந்திருப்பதால் குஷியில் இருக்கிறாராம் பூஜா.
வெல்கம் பேக் பூஜா...

தேர்தல் கணிப்புகளுக்குப் போட்டியாக, அடுத்த ‘பிக் பாஸ் சீசன் 5’ பற்றிய கணிப்புகள்தான் சமூக வலைதளங்களில் ஹாட்டாக ஓடிக்கொண்டிருக்கின்றன. யூடியூப்பில் 5 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துவரும் ‘என்ஜாய் என்ஜாமி’ பாடலை பாடிய பாடகி தீ, சொல்லிசை பாடகர் அறிவு ஆகியோர் அடுத்த பிக் பாஸ் சீசனில் கண்டிப்பாகக் கலந்து கொள்வார்கள் என்கிறார்கள்.
அதெல்லாம் சரி... உலகநாயகன் கலந்துக்குவாரா?

மோகன்லால் நடிக்கும் ‘ஆராட்டு’ என்ற மலையாளப் படத்தின் பாடல் காட்சி ஒன்றில், சிறப்புத் தோற்றத்தில் காட்சி தருகிறாராம் ஏ.ஆர்.ரஹ்மான். ஏற்கெனவே ‘பிகில்’ திரைப்படத்திலும் ஒரு பாடலில் தோன்றினார் ரஹ்மான்.
உங்க இளமையின் ரகசியம் என்னங்க சார்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE