நடுவர்களுக்குத் தான் சவால்!- ‘ராக்ஸ்டார்’ அனுபவம் பகிரும் கீர்த்தி சாந்தனு

By காமதேனு

மஹா
readers@kamadenu.in

ஜீ தமிழில், விரைவில் மார்ச் 28 முதல் ஒளிபரப்பாகவிருக்கும் ‘ராக்ஸ்டார்’ மியூசிக் ரியாலிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறார், தொகுப்பாளினி கீர்த்தி சாந்தனு. கலைஞர் டிவி, கலர்ஸ் தமிழ் என வட்டமடித்து வந்த தொகுப்பாளினி கீர்த்தி, ஒரு புதிய இசை நிகழ்ச்சி வழியாக ஜீ தமிழில் கால்பதிக்கிறார். இதில் என்னென்ன புதுமைகள் இருக்கும் என்பது குறித்து அவரிடம் விரிவாகப் பேசியதிலிருந்து...

 ராக்ஸ்டார் இசை நிகழ்ச்சி குறித்து கொஞ்சம் பகிரலாமா?

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், பாடகர்கள் மனோ, ஸ்ரீனிவாஸ் நடுவர்களாக பொறுப்பேற்கும் இசை நிகழ்ச்சி இது. தேவி ஸ்ரீபிரசாத் முதன் முதலாக ஒரு ரியாலிடி ஷோவுக்கு வருகிறார். இதன் ப்ரொமோ வீடியோவே வேற லெவலில் ரீச் ஆகியிருக்கு. அப்படியென்றால் நிகழ்ச்சியை இன்னும் பல மடங்கு பிரமாண்ட மாக்கி கொடுக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE