சினிமா பிட்ஸ்

By காமதேனு

பிட்லீ
readers@kamadenu.in

திரையிசைக்கு இணையாக வேகமாக வளர்கிறது தமிழ் தனியிசைத் துறை. கார்ப்பரேட் இசை நிறுவனங்களும் களத்தில் குதித்ததைத் தொடர்ந்து, சினிமா நட்சத்திரங்களை தனியிசை மியூசிக் வீடியோக்களில் நடிக்க வைக்கும் போக்கும் அதிகரித்துள்ளது. ஹன்ஷிகா மோத்வானியைத் தொடர்ந்து தற்போது நிவேதா பெத்துராஜும் மியூசிக் வீடியோவில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இவர் நடித்து சமீபத்தில் வெளியான திங் மியூசிக்கின் தயாரிப்பான ‘What the Uff’ பாடல் மில்லியன்களில் ஹிட்டடித்து வருகிறது.

உள்ளூர் பொண்ணுங்களோட ‘டிக்டாக்' வீடியோக்களை விடவா?

‘குட்டி ஸ்டோரி’ ஆந்தாலஜி திரைப்படத்தில் நலன் குமாரசாமி இயக்கிய ‘ஆடல் பாடல்’ என்கிற கடைசி கதையில், விஜய்சேதுபதியின் மனைவியாக நடித்திருந்தார் ‘அருவி’ புகழ் அதிதி பாலன். விஜய்சேதுபதியை விஞ்சிவிட்டார் என்று விமர்சகர்கள் பாராட்டியதைத் தொடர்ந்து, மேலும் ஒரு ஆந்தாலஜியில் கதாநாயகியாக நடிக்கிறார் அதிதி. இயக்குநர்கள் மணிரத்னம் மற்றும் ஜெயந்திரா தயாரிக்க, வசந்த் இயக்கும் கதையில் நடிக்கிறார் அதிதி பாலன். ‘நவரசா' என்று தலைப்புச் சூட்டப்பட்டிருக்கும் இதில் மொத்தம் 9 கதைகள் இடம்பெறுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE