என்னோட நிஜத்தை ரசிகர்கள் ஏத்துக்கிறதில்ல!- - ‘யாரடி நீ மோகினி’ நட்சத்திரா

By காமதேனு

மஹா
readers@kamadenu.in

ஜீ தமிழில்,  ‘யாரடி நீ மோகினி’ மெகா தொடரில் வெகுளி நாயகியாக நடித்து பார்வையாளர்கள் மனதில் இடம்பிடித்து 
வருகிறார், நட்சத்திரா.  அமானுஷ்யப் பின்னணி, குடும்ப சென்டிமென்ட்,  கணவன்-மனைவி உறவுப் போராட்டம் என வித்தியாசமான திருப்பங்கள் கொண்ட சீரியலின் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் நட்சத்திரா.  

பெரும்பாலும் சீரியலில் துணிச்சலான கதாபாத்திரமாகவே நாயகிகளைப் பார்க்கிறோம்.  ஆனால், உங்களுடைய வெண்ணிலா கதாபாத்திரம்  பயம், பதற்றம், அழுகை கலந்தவராக இருக்கிறாரே?

நிஜ வாழ்க்கையில வெண்ணிலா அளவுக்கு யாரும் பொறுமையா  இருக்க மாட்டாங்க.  அதுவும் தன்னோட புருஷனையே விட்டுக்கொடுக்கிற அளவுக்குஒரு கதாபாத்திரம். “இப்படியெல்லாமா ஒரு பெண் இருப்பாங்க?”ன்னு சீரியல் புரடெக்‌ஷன் டீம்ல நானேபலமுறை கேட்டிருக்கேன்.  ஆனால், இந்த கதாபாத்திரத்துக்கும்,  கதை போக்குக்கும் ஆடியன்ஸ் மத்தியில நல்ல வரவேற்பு இருக்குது.  

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE