சினிமா பிட்ஸ்

By காமதேனு

பிட்லீ
readers@kamadenu.in

த்ரிஷ்யம் 2' படத்தின் அதிரி புதிரியான வெற்றியால், அரண்டுபோய் கிடக்கிறதாம் அமேசான் வட்டாரம். அது கொடுத்த விலையைவிட கூடுதலாக ஒரு மடங்கு லாபத்தை அள்ளிவிட்டதாக ஓடிடி மீடியேட்டர்கள் ட்விட்டியிருக்கிறார்கள். தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படத்தின் ரீமேக் வேலைகள் கடகடவென்று தொடங்கிவிட்ட நிலையில், தமிழில் கமல் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பது சஸ்பென்ஸாக இருந்தது. த்ரிஷ்யம் முதல் பாகத்திலேயே கௌதமியின் நடிப்பு அவ்வளவாக சோபிக்காத நிலையில், இரண்டாம் பாகத்துக்கு மீனாவையே டிக் அடித்துவிட்டாராம் கமல்.

கண்ணும் கதை சொல்லுமே...

சினிமா வாய்ப்பு இல்லாததால், மியூசிக் வீடியோ பக்கம் திரும்பிய ஹன்ஷிகா மோத்வானிக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. அவரது முதல் இந்தி ஆல்பமான ‘பூட்டி ஷேக்’ ஹிட்டடித்ததைத் தொடர்ந்து, இரண்டாவது ஆல்பமான ‘மாஸா’ இசைக் காணொலியும் மெகா ஹிட். இணையத்தில் வெளியான மூன்றே நாட்களில் 20 மில்லியன் பார்வைகளுடன், இந்திய அளவிலான பாடல்களில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சம்பளம் என்று ஒப்பந்தம் போட்டிருக்கிறாராம் ஹன்சிகா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE