சினிமா பிட்ஸ்

By காமதேனு

விஷ்ணுவர்த்தனின் தம்பி என்று சொன்னால் தெரிகிறதோ இல்லையோ.. ‘கழுகு கிருஷ்ணா’ என்றால் யாருக்கும் தெரிந்துவிடுகிறது. இவரது எந்தப் படமும் சரியாக ஓடாவிட்டாலும் இவரிடம், அடுத்த 2 வருடங்களுக்கு கால்ஷீட் இல்லையாம். இவர் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் 2 கதாநாயகி கள். ஒருவர் மலையாள நாயகி சரண்யா நாயர். மற்றொருவர் அனுசுலா எனும் மாடல்.

ரெண்டு இஞ்சின் பொருத்தியாச்சு, இந்த வண்டியாவது ஓடுமா?

‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் நடந்த பெரிய விபத்தால்,  “லைகா நிறுவனத்தின் கதை முடிந்தது, கடையைக் காலி செய்துவிட்டுப் போய்விடுவார்கள்” என்று பரபரப்பாகப் பேச்சு கிளம்பியது. ஆனால், ‘பாகுபலி’ இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரத்தம் ரணம் ரௌத்திரம்' (ஆர்.ஆர்.ஆர்) படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கடும் போட்டிக்கு நடுவில் வாங்கி, தாமொரு வலிமையான நிறுவனம் என்பதைக் காட்டியிருக்கிறது லைகா.  

பாகுபலி சிலை மாதிரியே உயர்ந்து நிற்கிறீங்க பாஸ்...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE