காதல்: தமிழ்த் திரையின் தனிப்பெருந்துணை

By காமதேனு

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத அம்சங்கள் என்றால், அது காதலும் ஆக்‌ஷனும்தான். தமிழர் வாழ்விலும் காதலும் வீரமும் முக்கிய அம்சங்கள்தானே!

காதலை வெளிப்படுத்தவும் அதில் வெற்றிபெறவும்கூட வீரம் அவசியம். அதேசமயம், காதலில் விழுவதே வெற்றிதான். எனவே, கைகூடியவை, கூடாதவை என்று காதல்களைப் பகுத்துப் பார்க்க வேண்டியதில்லை. அந்த வகையில் தமிழ்த் திரையின் தவிர்க்க முடியாத காதல் படங்களை இந்தக் காதலர் தினத்தில் நினைவுகூருவோம். இவைதான் தமிழ் சினிமாவின் சிறந்த காதல் படங்கள் என்று சொல்வதல்ல நோக்கம். இந்தப் படங்களைத் தவிர்த்துவிட்டு, காதல் எனும் வகைமையில் தமிழில் ஒரு பட்டியலை உருவாக்க முடியாது என்பதுதான் விஷயம்!

காவியக் காதல்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE