மஹா
readers@kamadenu.in
சன் டிவியில் ‘அழகு’ நெடுந்தொடர் வழியே மிரட்டலான வில்லியாக அறிமுகமானவர் சங்கீதா. இப்போது, ‘அன்பே வா’ நெடுந்தொடர் மூலம் மீண்டும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அதிரடி செய்கிறார். அவருடன் பேசியதிலிருந்து...
‘அன்பே வா’ நெடுந்தொடர் நாட்கள் எப்படி நகர்கின்றன?
‘அழகு’ சீரியலுக்குப் பிறகு மீண்டும் நெகட்டிவ் கதாபாத்திரமா வேண்டவே, வேண்டாம் என இருந்தேன். ‘அன்பே வா’ சீரியலைத் தயாரிக்கும் ’சரிகம’ நிறுவனம் பெரிய கம்பெனி என்பதால் மறுக்க முடியவில்லை. இதில் நடிக்க ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஆச்சு. படுபயங்கரமான வில்லிங்கிறதால எல்லோரும் திட்டித் தீர்க்குறாங்க.