எல்லாமே கடவுள் தந்த பரிசு!- ‘செம்பருத்தி’ தீப்தி கபில் சிலிர்ப்பு

By காமதேனு

மஹா
readers@kamadenu.in

ஜீ தமிழில் ‘செம்பருத்தி’, சன் டிவியில் ‘நிலா’ என இரண்டு சீரியல்களில் நடிப்பதன் மூலம் சின்னத் திரை ரசிகர்களை ஈர்த்திருக்கும் தீப்தி கபில், பன்முகத் திறமை கொண்ட நடிகை. காஸ்ட்யூம் டிசைனர், மாடலிங் கலைஞர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர் தீப்தி. “நான் நடிப்புத் துறைக்கு வருவேன் என ஒருபோதும் கனவு கண்டதில்லை. சின்ன வயது முதல் எனக்கு இருந்த நடனக் கலை, பேச்சுத்திறன் எல்லாம் சேர்ந்துதான் இந்தத் துறை மீதான காதலை விதைத்திருக்கிறது’’ என்கிறார் தீப்தி. ‘காமதேனு’ மின்னிதழுக்காக உற்சாகம் பொங்க அவர் உரையாடியதிலிருந்து...

 ‘நிலா’ சீரியலைத் தொடர்ந்து இப்போது ‘செம்பருத்தி’ சீரியலிலும் நடிக்கிறீர்கள். எப்படிக் கிடைத்து அந்த வாய்ப்பு?

 ஜீ தமிழ் சீரியல்களின் பட்டியலில் ‘செம்பருத்தி’ சீரியலுக்கென்று ஒரு தனி இடம் உண்டு. இந்த சீரியலில் நடிக்க எனக்கு 3 வருடங்களுக்கு முன்பே வாய்ப்பு வந்தது. ஆனால், சில பணிகள் குறுக்கிட்டதால் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கொஞ்சம் தாமதமானாலும் இப்போது சரியான சூழலில் இந்த சீரியலுக்குள் நுழைந்திருக்கிறேன். சொல்லப்போனால், முதலில் வேறொரு புதிய சீரியலில் நடிக்கத்தான் ஜீ தமிழ் சேனலுக்குள் நுழைந்தேன். எதிர்பாராத திருப்பமாக, உள்ளே வந்த அடுத்த நாளே ‘செம்பருத்தி’ சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உடனடியாக, அந்தக் கேரக்டருக்கு என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டேன். நான் எடுத்த முடிவு சரிதான் என்பது அந்தக் கேரக்டருக்கு ரசிகர்களிடமிருந்து கிடைத்திருக்கும் வரவேற்பு மூலம் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE