ஓ.டி.டி. உலா: சுய மரியாதைக்கு முதல் மரியாதை!

By காமதேனு

எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

ஆண்-பெண் இடையிலான ஆதி நேசம் துளிர்ப்பதற்கு உடல் கவர்ச்சியே அடிப்படை என்பதை, காதலை விதந்தோதும் திரைப்படங்களில் பல வண்ணச் சரிகைகளில் சுற்றிச் சுற்றிச் சொல்லியிருப்பார்கள். ஆனால், சக ஜீவன் மீது கொள்ளும் மரியாதையும், ஒருவரது சுயமரியாதையை அடுத்தவர் மதிப்பதுமே ஆழமான நேசத்துக்கு உரம் சேர்க்கும் என்பதை எதார்த்தமாய் பேசுகிறது ‘சார்’ திரைப்படம்.
உலகத் திரைப்பட விழா மேடைகளை அலங்கரித்த இத்திரைப்படம், ‘இஸ் லவ் எனஃப்? சார்’ என்ற தலைப்பில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஈர்க்கும் இரு துருவங்கள்

உள்ளடங்கிய மராட்டிய கிராமத்தைச் சேர்ந்த பெண் ரத்னா. 19 வயதில் மணமாகி 4 மாதத்தில் கணவனை இழந்தவள். தங்கையின் கல்வி உள்ளிட்ட குடும்ப நலன்களுக்காக மும்பை மாநகரில் பணக்காரக் குடும்பமொன்றின் பணிப்பெண்ணாகச் சேவகம் செய்கிறாள். ஆடை வடிவமைப்பாளர் ஆக வேண்டும் எனும் கனவும் ரத்னாவுக்கு உண்டு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE