பகத்பாரதி
readers@kamadenu.in
“நான் ‘ராஜா ராணி’ சீரியலின் மிகப்பெரிய ரசிகை. அதன் இரண்டாவது பாகத்துல நான் நடிப்பேன்னு கொஞ்சம்கூட நினைச்சுப் பார்க்கலை” எனப் பரவசத்தில் படபடக்கிறார் ஆங்கரிங் புகழ் அர்ச்சனா. அவரிடம் பேசியதிலிருந்து...
முதலில் ஆங்கரிங் கனவு நனவானது எப்படி என்று சொல்லுங்கள்...
எனக்குச் சின்ன வயசுல இருந்தே ஆங்கரிங் பண்ணணும்னு ஆசை. ‘ஆதித்யா’ டிவியில் ஒரு நிகழ்ச்சியில் போட்டியாளரா கலந்துக்கிட்டு வெற்றி பெற்றேன். எதிர்பாராமல் அதே சேனலில் ஆங்கரிங் வாய்ப்பு கிடைச்சது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆங்கரிங் பண்ணிட்டு இருந்தேன். அந்தச் சமயத்தில்தான் ‘ராஜா ராணி’ சீஸன் 2 வாய்ப்பு கிடைச்சது. உடனே ஓகே சொல்லிட்டேன்!