ரசிகா
readers@kamadenu.in
பொங்கலுக்கு வெளியான ‘பூமி’, ‘ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சம் நிறைந்திருக்கிறார் அறிமுக நாயகி நிதி அகர்வால். நடிப்பு, கிளாமர் இரண்டிலுமே முத்திரைப் பதிக்கும் நடிகையாகத் திரையில் தன் கணக்கைத் தொடங்கியிருக்கும் நிதி அகர்வாலுடன், ‘காமதேனு’ மின்னிதழுக்காக ஒரு பேட்டி:
நீங்கள் திரைத் துறைக்கு வந்தது தற்செயலா, திட்டமிடலா?
நன்றாகத் திட்டமிட்டு... சரியான தயாரிப்புகளுடன் சினிமாவுக்கு வந்தவள் நான். பள்ளி நாட்களிலேயே சூப்பர் ஹிட் சினிமா பாடல்களுக்கு டான்ஸ் ஆடுவது எனக்குப் பிடிக்கும். வீட்டுக்கு வரும் விருந்தினர்கள், “நீ என்னவா ஆகப்போறே?” என்று கேட்டால், “சினிமாவில் பெரிய நடிகை ஆகணும்” என்று சொல்வேன். என் ஆர்வத்தைக் கவனித்த அம்மா என்னை நடனம் கற்றுக்கொள்ள வைத்தார். ஆனால், ப்ளஸ் டூ படிக்கும்போது சினிமா ஆர்வம் குறைந்துபோயிருந்தது.