எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in
துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் வெளியாகி வசூலையும், விருதுகளையும் வாரிக்குவித்த ‘சார்லி’ மலையாளப் படத்தின் மறுஆக்கமாகத் தமிழுக்கு வந்திருக்கிறது ‘மாறா’. ‘அமேசான் பிரைம் வீடியோ’வில் ஜனவரி 8-ல் இப்படம் வெளியானது.
அழியாத சித்திரங்கள்
பால்யத்தில் கேட்கக் கிடைக்கும் கதைகள் மனத்தின் ஆழத்தில் வேரூன்றுவதும், பிற்காலத்தில் அந்தக் கதைகளுக்கு அந்தரங்கமாய்ச் சிறகுகள் முளைப்பதும் இயல்பு. அப்படியான பொக்கிஷக் கதையொன்று சிறுமி பார்வதிக்குச் சொல்லப்படுவதுடன் படம் தொடங்குகிறது. சிறுமி வளர்ந்து பழங்கட்டிடங்களை அவற்றின் கலைநயம் குலையாது புதுப்பிக்கும் நிபுணராகிறாள். ஒரு கட்டத்தில் வீட்டாரின் திருமண ஏற்பாடுகளில் இருந்து தப்பிக்க, பயணங்களில் தன்னைத் தொலைக்க முற்படுகிறாள்.