காதல்... கல்யாணம்... துபாய்..!- கல்யாண வீடு கீதாஞ்சலி உற்சாகம்

By காமதேனு

மஹா
readers@kamadenu.in

விஜய் டிவியில், ‘ராஜா ராணி’, சன் டிவியில், ‘நாதஸ்வரம்’, ‘வாணி ராணி’, ‘கல்யாண வீடு’ என அடுத்தடுத்து தொடர்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திவந்த கீதாஞ்சலிக்கு மார்ச் முதல் வாரத்தில் டும்.. டும்... டும்! 

‘‘என் குடும்பத்துக்கும், நெருக்கமான நண்பர்களுக்கும் மட்டுமே தெரிந்த என் கல்யாணம் பற்றிய செய்தியை ‘காமதேனு’ மூலமா வெளியில சொல்றேன்’’ என்று கல்யாணப் பூரிப்போடு கதைக்க ஆரம்பிக்கிறார், காரைக்குடி பெண் கீதாஞ்சலி!
    
சமீபத்தில் நிறைவடைந்த ‘கல்யாண வீடு’ தொடருக்குப் பிறகு புதிய தொடர் எதிலும் உங்களைப் பார்க்க முடியவில்லையே?

சன் டிவியில ‘கல்யாண வீடு’ தொடர் நிறைவடையும் நேரம் வீட்ல கல்யாண வேலைகளை ஆரம்பிச்சுட்டாங்க. கொஞ்ச நாட்களுக்குச் சின்னதாக நடிப்புக்கு ப்ரேக் எடுத்துக்கலாம்னு யோசிச்சிக்கிட்டே இருந்தேன். கரோனா சமயத்துல அந்த சீரியல் அதுவாகவே நிறைவு பகுதியை எட்டியது. இதுதான் நமக்கும் சரியான நேரம்னு முடிவெடுத்தேன். சில மாதங்களுக்குப் புதிய தொடர் எதிலும் கமிட் ஆகலை. சொந்த ஊரான காரைக்குடிக்கும் வந்தாச்சு. இன்னும் சில மாதங்களுக்கு வீட்ல ஒரே திருமண வைபவப் பேச்சுத்தான்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE