ஓ.டி.டி. உலா: குற்றமும் விசாரணையும்

By காமதேனு

எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

திரைத் துறையில் புதிய போக்குகளுக்குக் கரோனா காரணமானதைக் கடந்த ஆண்டு பார்த்தோம். பெருந்தொற்று ஏற்படுத்திய அச்சுறுத்தல் காரணமாக, ஓடிடி தளங்களில் ஏராளமான திரைப்படங்கள் குவிந்தன. அதில் ரசிகர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். அதன் விளைவாகப் புத்தாண்டிலும் ஓடிடி வெளியீடுகள் மீதான எதிர்பார்ப்புகள் எகிறிக் கிடந்தன. அவற்றைப் பூர்த்தி செய்யும் வகையில் தரமான படமாக வெளியாகியிருக்கிறது ‘நெயில் பாலிஷ்’ எனும் இந்தித் திரைப்படம். ஜனவரி 1 அன்று ‘ஜீ5’ தளத்தில் இப்படம் வெளியாகியிருக்கிறது.

நான்கு தோள்களில் நகரும் கதை

முன்னாள் ராணுவ அதிகாரியான வீர் சிங், லக்னோவில் சிறாருக்கான பிரபல விளையாட்டு பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். சமூகத்தில் செல்வாக்கான அவருக்கு எதிராக, புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளைக் கடத்தி, பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைகளை நிகழ்த்தியதாகப் புகார்கள் எழுகின்றன. வீர் சிங் கைது செய்யப்படுகிறார். வழக்கில் அவருக்கு ஆதரவாக, அரசியல் கணக்குகளுக்காக ஆஜராகும் அதிரடி வக்கீலும், எதிராக சாமானிய அரசு வக்கீலும் கோர்ட் கோதாவில் குதிக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE