10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் தனுஷ். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் இருவரும் இணைகிறார்கள். இது முடிந்ததும் 2024-ல் வெளியாகும் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்திலும் தம்பியே கதாநாயகன் என்று அறிவித்திருக்கிறார் அண்ணன்...
காதல் கொண்டேன், 7ஜி போல் வர வாழ்த்துகள்...
மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் தெலுங்குப் படத்தில், முதல்வரின் மகளாக நடிக்க இருக்கிறார் நயன்தாரா. நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து ஹிட்டான ‘லூசிஃபர்’ மலையாளப் படத்தின் மறுஆக்கம் இது. ‘தனி ஒருவன்’, ‘வேலைக்காரன்’ என அடுத்தடுத்து மோகன் ராஜா இயக்கத்தில் நடித்த நயன்தாரா, அந்த நட்பு காரணமாகவே இந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டாராம்!
சிரஞ்சீவிக்கு ஜோடியா நடிக்கச் சொன்னாலும் நடிச்சிருப்பீங்க தானே?