பிட்லீ
readers@kamadenu.in
ரஷ்மிகா மந்தனாவின் செல்லச் சேட்டைகள் நிறைந்த நடிப்புக்கு டோலிவுட் மொத்தமும் அடிமையாகிக் கிடக்கிறது. அடுத்து கோலிவுட்டும், மல்லுவுட்டும் ரஷ்மிகாவைக் கொண்டாடத் தயாராகிவிட்டன. அம்மணிக்கு இப்போது பாலிவுட்டிலிருந்தும் அழைப்பு. ஷாந்தனு பாஹி இயக்கும் ‘மிஷன் மஞ்சு’ இந்திப் படத்தில், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் டூயட் பாடவிருக்கிறார் ரஷ்மி.
இங்கம் இங்கம் இங்கம் கவரே...
மெரினா புரட்சியில் கோஷம் போட்டு, பிக் பாஸில் வேஷம் போட்ட ஜூலி, அந்தப் புகழ் வெளிச்சத்தில் சினிமாவுக்குள்ளும் புகுந்தார் அல்லவா? ‘அம்மன் தாயி’, ‘பொல்லாத உலகத்தில் பயங்கர கேம்’, மருத்துவக் கனவு நிறைவேறாமல் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் வாழ்க்கைச் சித்திரம் போன்ற படங்களில் நடித்தும், எந்தப் படமும் இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும் அசராமல் மாடர்ன் லுக் புகைப்படங்களைப் பதிவேற்றி லைக்குகளை குவித்து வருகிறார்.