முல்லையாக என்னை ரசிகர்கள் நிச்சயம் ஏத்துப்பாங்க!- ‘பாரதி கண்ணம்மா’ காவ்யா நம்பிக்கை

By காமதேனு

பகத்பாரதி
readers@kamadenu.in

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ராவின் திடீர் மரணத்தையடுத்து, ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் நடிக்கும் காவ்யா அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். “முல்லை பாத்திரத்துல நடிக்கிறது சவாலானதுதான். ஆனாலும் துணிஞ்சு இறங்கிட்டேன்” என்கிறார் காவ்யா. அவரிடம் பேசியதிலிருந்து...

உங்களைப் பற்றி?

என் சொந்த ஊர் ஆம்பூர். எனக்குச் சின்னவயசுல இருந்தே நடிப்பு மேல ஈர்ப்பு இருந்துச்சு. காலேஜ்ல ஆர்க்கிடெக்ட் படிக்கும்போது 
குறும்படங்கள்ல நடிச்சேன். அதுக்கப்புறம் நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. அப்படித்தான் ‘பாரதி கண்ணம்மா' வாய்ப்பும் கிடைச்சது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE