நிச்சயம் காதல் திருமணம் தான்!- ‘தேன்மொழி பி.ஏ.,’ ஜாக்குலின் நேர்காணல்

By காமதேனு

“நிஜத்துல நாம வாழ்ற வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கிற மாதிரி ஒரு ரோல் அமைஞ்சா அதை மிஸ் பண்ணலாமா? அப்படி வந்ததுதான் இந்த மெகா தொடர்!’’ - என்கிறார், விஜய் டிவியின் ‘தேன்மொழி பி.ஏ.’ சீரியல் நாயகி ஜாக்குலின். தொடர்ந்து அவரிடம் பேசியதிலிருந்து...

ஜாக்குலினுக்கு தேன்மொழியை அவ்வளவு பிடிக்குமா?

250 எபிசோடுகளுக்கு மேல நகர்ந்தாச்சு. நாட்கள் ஓடினதே தெரியல. தேன்மொழி சீரியல் ஷூட்டிங்னா... காலில் றெக்க கட்டிக்கிட்ட கணக்கா செம ஜாலி ஆயிடுவேன். சீரியல்ல எப்படி கலகலன்னு என்னோட கேரக்டரை பாக்குறீங்களோ அதேமாதிரிதான் ஷூட் பண்ற இடத்திலும் ஜாலியா இருப்பேன். குடும்பத்துல பெண் கள், பெரியவங்கன்னு மட்டும் இல்லாம இளைஞர்களையும் கவர்ந்த சீரியலா பெயர் வாங்கிட்டிருக்கோம். இதைவிட வேற என்ன பெருசா சந்தோஷம் வேணும்.

ஒரு காலகட்டத்தில் ஊரில் பி.ஏ., பட்டப்படிப்பு படித்தவர் என்றால் பிரமிப்பாக இருக்கும். ‘தேன்மொழி பி.ஏ.,’ பெயர் பின்னணிக்கு அப்படிப்பட்ட பெருமை உண்டா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE