பகத்பாரதி
readers@kamadenu.in
விஜய் டிவியின் ‘சரவணன் மீனாட்சி' தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்களைக் கவர்ந்த ரம்யா ராமகிருஷ்ணன், தற்போது சன் டிவியின் ‘ரோஜா’ தொடரில், நகைச்சுவை கலந்த எதிர்மறைக் கதாபாத்திரத்தில் கலக்கிக்கொண்டிருக்கிறார். சசிகுமார் நடிக்கும் ‘ராஜவம்சம்’ படத்திலும் நடித்திருக்கும் மகிழ்ச்சியில் இருக்கும் ரம்யாவிடம் ஒரு பேட்டி:
ரோஜா சீரியலில் நடிக்கும் அனுபவம் எப்படி?
விஜய் டிவியின் ‘பொன்மகள் வந்தாள்' சீரியலில் நடிச்சிட்டு இருக்கும்போது ‘ரோஜா’ வாய்ப்பு கிடைச்சது. நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க எனக்குப் பிடிக்கும். இப்போ நான் நடிக்கிற கேரக்டர் ரொம்பவே வெகுளி. அதேசமயம், சொத்து வேணும்னு ஆசைப்படுற பொண்ணுன்னு சொன்னாங்க. முழுசா நெகட்டிவ் ரோலில் நடிக்கிறதைவிட, காமெடி கலந்து நடிச்சா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன். ‘சரிகம’வோட தலைவர் பி.ஆர்.விஜயலட்சுமிகிட்ட அதைச் சொன்னேன். அவங்களும் எனக்கு ஓகே சொல்லிட்டாங்க. டைரக்டரும் அந்தச் சூழலுக்கேற்ப காமெடி கலந்து வில்லத்தனம் பண்ண அனுமதி கொடுப்பாங்க. செட்ல செம்ம ஜாலியா இருக்கும்.