கன்னடத்தில் உருவாகும் ‘ராஜவீர மடகாரி நாயகா’ என்ற வரலாற்றுப் படத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடக்கிறதாம். ஒப்புக்கொண்டால் அவர் பத்து வருடங்களுக்குப் பிறகு கன்னடத்தில் நடிக்கும் படமாக இது இருக்கும். நயன்தாரா கன்னடத்தில் நடித்த ஒரே படம் 2010-ல் வெளியான ‘சூப்பர்’ மட்டுமே.
அந்த ஊர் ஹீரோக்களோட எல்லாம் நடிக்காதீங்க அன்பே...
ஜெ யம் ரவி நடிப்பில் உருவான ‘பூமி’ படத்தின் தயாரிப்பாளர் அவரது மாமியாரே. ஏற்கெனவே தன் மருமகனை வைத்து அவர் தயாரித்த ‘அடங்க மறு’ பட வியாபாரத்தில் ஏகப்பட்ட குழப்பம். இம்முறை விழிப்பாக, முழு பணத்தையும் கொடுத்தால்தான் படம் என்ற கண்டிஷனை விநியோகஸ்தர்களுக்குப் போட்டுவிட்டார் மாமி. இதை ஏற்று ஒரு விநியோகஸ்தர் 12 கோடிக்கு படத்தை வாங்கியுள்ளாராம்.
அந்த மன தைரியத்தைப் பாராட்டியே ஆகணும்...
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் பிருந்தா அறிமுக இயக்குநராகக் களமிறங்கும் படத்திலும் துல்கர் சல்மான் நடிக்கவிருக்கிறார். காஜல் அகர்வாலும் அதிதி ராவும் தான் நாயகிகள்.
நீங்க கலக்குங்க தம்பி...
கே ரளத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் மோகன் லாலின் ‘மரக்கர் : அரபிக் கடலிண்டே சிம்ஹாம்’. இதில் பாரம்பரிய கேரள யுவதியாக நடித்திருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ். இந்த வெற்றியின் வாயிலாக மலையாள ரசிகர்களின் அபிமான கதாநாயகியாகிவிடலாம் என்ற கனவில் இருக்கிறார் கீர்த்தி.
சூப்பர் ஸ்டாரின் `அண்ணாத்த'யும் இருக்குதுல்ல...