நம்பிக்கை நட்சத்திரம் ‘குவாடன்’

By காமதேனு

தொகுப்பு: தேவா

குள்ளமாக இருப்பதால் சக மாணவர்களால் கிண்டல் செய்யப்பட்ட சிறுவன் குவாண்டன் பேலஸ், ‘எனக்கு கயிறு ஒன்று வாங்கித் தாருங்கள். நான் தற்கொலை செய்துகொண்டு சாகிறேன்’ என்று தன் தாயிடம் தேம்பித் தேம்பி அழுகிறான். அந்த வீடியோவை இணையத்தில் பார்த்துவிட்டு உலகம் முழுவதுமிருந்தும் அந்தச் சிறுவனுக்கு ஆதரவுக் குரல் எழுந்தது. குறிப்பாக, குயின்ஸ்லாந்தில் நடந்த ஆல்-ஸ்டார் அணிக்கும், நியூஸிலாந்து மாரியோஸ் அணிக்கும் இடையிலான ரக்பி  விளையாட்டுப் போட்டியில் சிறுவன் குவாண்டன் பேலஸை ரக்பி அணியை வழிநடத்தச் சொல்லி வீரர்கள் அழைத்து கவுரவித்தனர். அந்தத் தருணம் தன்னுடைய அனைத்து வேதனைகளையும் மறந்து மகிழ்ச்சியின் உச்சத்துக்கே  சென்றான் குவாண்டன். இந்தப் புகைப்படமும் உலகம் முழுவதும் வைரலானது. உலக மக்கள் ஒன்றுதிரண்டு காட்டிய மனிதம் குவாண்டனுக்கு வாழ்க்கையின் மீதான நம்பிக்கையைக் கொடுத்தது.

சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ்.- எச்.ராஜா மிரட்டல்

வர வர இந்த அட்மின் தொல்லை தாங்கலப்பா...- தாடிக்காரன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE