கதாசிரியர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது!- அஜயன் பாலா ஆவேசம்

By காமதேனு

க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

சினிமா என்றாலே பிரம்மாண்டம், நடிகர்களின் புகழ் வெளிச்சம் போன்றவற்றைத்தான் பிரதானமாகக் கருதுகிறோம். ஆனால், சினிமாவின் முக்கியக் கண்ணியே கதைதான். ஹாலிவுட் முதல் மலையாளத் திரையுலகம் வரை கதாசிரியர்களுக்குத் தனி மதிப்பு உண்டு. ஆனால், தமிழில் அந்தக் கலாச்சாரம் வளரவே இல்லை. அதன் சமீபத்திய உதாரணம்தான், ஜெயலலிதாவின் பயோபிக் படமான ‘தலைவி’ படத்தின் போஸ்டரில் தனது பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டதாக எழுத்தாளர் அஜயன் பாலா எழுதிய முகநூல் பதிவு. படக் குழு சார்பில் சமாதானம் செய்யப்பட்டுவிட்டதால் அந்தப் பதிவை இப்போது நீக்கியிருக்கிறார் அஜயன். அவருடன் உரையாடியதிலிருந்து…

‘தலைவி’ படத்தில் என்னதான் பிரச்சினை?

அந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் சில காட்சிகளில் எனக்கு முரண்பாடான கருத்து  இருந்தது. எழுத்தாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் இடையில் இப்படி கருத்து வேறுபாடு எழுவது சகஜம். அந்தக் காட்சிகள் குறித்து இப்போது சொல்ல முடியாது. சொன்னால், படத்தின் சுவாரசியம் கெட்டுவிடும். எழுத்தாளர் சொல்லும் மாற்றங்களை இயக்குநர் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், எழுத்தாளரின் உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் மறுக்கப்படும்போதுதான் எதிர் குரல் எழுப்ப வேண்டியுள்ளது.
    
சமாதானப் பேச்சுவார்த்தையில் இயக்குநர் ஏ.எல்.விஜய் மற்றும் தயாரிப்பாளருடனான சந்திப்பில் என்ன நடந்தது?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE