சினிமா பிட்ஸ்

By காமதேனு

தனக்கு 'மக்கள் செல்வி' என்று டைட்டில் போட வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம் வரலட்சுமி சரத்குமார். முடியாது என்று சொன்னதால்தான் பார்வையற்ற மாற்றுத் திறனாளியாக நடித்திருக்கும் ‘ராஜபார்வை’ படத்தின் புரோமோஷனுக்கு வர மறுத்துவிட்டாராம்.
மக்கள் செல்வன் என்ன சொல்றாரு?

‘காக்காமுட்டை’ இயக்குநர் மணிகண்டன் இயக்கியிருக்கும் படம் ‘கடைசி விவசாயி’. விஜய் சேதுபதி நடிக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், பட வியாபாரமோ கவலைக்கிடமாக இருக்கிறதாம். இந்தப்படத்தில் விஜய்சேதுபதி ஹீரோவா, இல்ல வழக்கம்போல குணச்சித்திர வேடமா என்ற விநியோகஸ்தர்களின் சந்தேகமே இதற்குக் காரணமாம்.
மாசத்துக்கு  4 படத்துல தலைகாட்டினா இப்படித்தான்..!

14 வருடங்கள் கழித்து விஜயசாந்தி நடித்த ‘சரிலேரு நீக்கவேரு’ என்ற தெலுங்கு படம் கடந்த மாதம் வெளியானது. அதில் அவருக்கு 4 கோடி சம்பளமாம். அடுத்ததாக மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘பிக் பிரதர்’ படத்திலும் நடித்துள்ளார் விஜயசாந்தி.
இன்றைய `லேடி சூப்பர் ஸ்டார்'  கூட நடிப்பீங்களா மேம்?

‘நான் சிரித்தால்’ படத்தின் தயாரிப்பாளர் சுந்தர்.சி-க்கும் படத்தின் நாயகன் ஹிப்-ஹாப் ஆதிக்கும் மனக்கசப்பாம். அதனால் தான் படத்தின் உரிமைகளை வேறு ஒரு விநியோகஸ்தருக்கு விற்றுவிட்டுப் பட வெளியீட்டு விழா, வெற்றி விழா என்று எதிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்துவிட்டாராம் சுந்தர்.சி.
அந்த விநியோகஸ்தருக்காவது சிரிப்பைத் தந்ததா படம்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE