க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in
ஏற்றி வாரிய கேசம், முறுக்கேறிய தேகம், கண்களை ஊடுருவும் தீர்க்கமான பார்வை, அனைத்துக் கேள்விகளுக்கும் சிரித்தவாறே பதில் சொல்வது என்று அக்மார்க் ஹீரோவாக மாறியுள்ளார் அருண் விஜய். கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாஃபியா’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அடுத்து ‘சினம்’ படத்தின் ஷூட்டிங்கில் இருந்தவரை ‘காமதேனு’விற்காகச் சந்தித்தேன். அவருடனான உரையாடலிலிருந்து…
தொடர்ந்து வித்தியாசமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிச்சிட்டு இருக்கீங்க. ‘மாஃபியா’ படத்தில் என்ன ஸ்பெஷல்?
‘மாஃபியா’ படத்துல என் கதாபாத்திரத்தின் பெயர் ஆர்யன். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியா நடிச்சிருக்கேன். இதுவரை நான் இது மாதிரியான கதாபாத்திரங்கள்ல நடிச்சதில்லை. வித்தியாசமான கதாபாத்திரங்கள் பண்ணும்போது அதுக்குத் தனியா ஹோம் வொர்க் பண்ணுவேன். ஆனா, இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட்டை கார்த்திக் நரேன் என்கிட்ட கொடுக்கும்போதே அதில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரின்னா எப்படி இருக்கணும். என்ன மாதிரி பேசணும், நடக்கணும்னு தெளிவா சொல்லிட்டார். அந்த தெளிவைப் படத்திலும் காட்டியிருக்கார். ஆரம்பம் முதல் கடைசி வரைக்கும் ரசிகர்களுக்குக் கொஞ்சம்கூட போரடிக்காமல் இந்தப் படம் இருக்கும்.