பகத்பாரதி
readers@kamadenu.in
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நாச்சியார்புரம்' தொடரில் நடிப்பவர் ரேமா. நடனக் கலைஞர், நடிகை எனப் பன்முகம் கொண்டவர். ஒரே நேரத்தில் ஜாலியான கல்லூரி மாணவியாகவும், சதிசெய்யும் எதிர்மறைப் பாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். படப்பிடிப்புத் தளத்தில் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருந்தவரிடம் ஒரு விறுவிறு பேட்டி.
சீரியல் வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?
‘ஓடி விளையாடு பாப்பா' நடன நிகழ்ச்சியில கலந்துக்கிட்டேன். அந்த நிகழ்ச்சியில எனக்கு நல்ல பேர் கிடைச்சது. அதன் மூலமா சீரியல் வாய்ப்பும் கிடைச்சது. ‘களத்துவீடு’ தான் நான் நடிச்ச முதல் சீரியல். மத்தமபடி நான் ஸ்கூல் படிக்கும்போதே நடிக்க ஆரம்பிச்சிட்டேனே.