விஜய் சேதுபதிதான் கடவுள்!- ‘ஓ மை கடவுளே’ இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து

By காமதேனு

க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் குறும்படங்கள் மூலம் கொடி நாட்டி, கோடம்பாக்கத்தில் நுழையும் இளைஞர்கள் ஏராளம். அவர்களில் ஒருவர் அஷ்வத் மாரிமுத்து. அசோக் செல்வன், ரித்திகா சிங், சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி என ரகளையான நட்சத்திரங்களுடன் இவர் இயக்கியுள்ள படம் ‘ஓ மை கடவுளே’. ட்ரெய்லர் மூலம் கவனம் ஈர்த்திருக்கும் இந்தப் படம் குறித்துப் பேச அஷ்வத் மாரிமுத்துவைச் சந்தித்தேன்.

‘நாளைய இயக்குநர்’ டு சினிமா இயக்குநர். எப்படி அமைஞ்சது இந்த வாய்ப்பு?

இன்ஜினீயரிங் முடிச்சிட்டு, ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில கலந்துக்கிட்டேன். அப்போ எனக்கு 21 வயசு தான். நான்தான் இருக்கிறதிலேயே இள வயது போட்டியாளர். அப்புறம் முருகதாஸ் சார் கிட்ட ஏழு மாசம் உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். எதுவும் செட் ஆகிற மாதிரி தெரியலை. சரி, சினிமாவை முறைப்படி படிப்போம்னு நியூயார்க் கிளம்பிப் போய்ட்டேன். அங்கே ஒரு வருஷம் படிச்சிட்டு வந்து இங்க நிறைய விளம்பரப் படங்கள் எடுத்தேன். ‘நாளைய இயக்குநர்’ காலத்திலிருந்தே எனக்கு அசோக் செல்வன் பழக்கம். “நான் எடுக்கும் முதல் படத்தில் நீ தான்டா ஹீரோ”ன்னு அவர்கிட்ட சொல்லியிருந்தேன். அது இப்போ நடந்துடுச்சு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE