முல்லைக்கு எதிர் துருவம் நான்!- ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ரா

By காமதேனு

பூஜா

விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்ரா, எப்போதும் முகம் நிறைந்த சிரிப்புடன்தான் வலம் வருகிறார். “தினமும் ரசிகர்கள்கிட்ட இருந்து என் வீட்டுக்குப் பரிசுப் பொருட்களா வந்துக்கிட்டு தெரியுமா? அதெல்லாம் எனக்குன்னு சொல்றதைவிட முல்லை கதாபாத்திரத்துக்குனுதான் சொல்லணும். முல்லை அணியிற மாதிரியான புடவைகள், கொலுசு, மெட்டின்னு ரசிகர்கள் அனுப்பிட்டே இருக்காங்க. இப்படி ஒரு அன்பை என் வாழ்நாள்ல பார்த்ததேயில்லை” என்று கண்கள் அகன்று விரியச் சந்தோஷத்துடன் பேச ஆரம்பிக்கிறார் சித்ரா.

நீங்கள் இதுக்கு முன்பும் பல தொடர்கள்ல நடிச்சிருக்கீங்க. ஆனா, முல்லை கதாபாத்திரம் மட்டும் இப்படி ஹிட் அடிக்க காரணம் என்ன?

ரசிகர்கள் என்னை அவங்க வீட்டுல ஒருத்தியாதான் பார்க்கிறாங்க. இளைஞர்கள் தங்களுக்கு வரப்போற பொண்ணு எப்படி குடும்பப்பாங்கா இருக்கணும்னு ஒரு கற்பனை வச்சிருப்பாங்களோ, பெரியவங்க தங்களோட பொண்ணு எப்படி அடக்க ஒடுக்கமா இருக்கணும்னு எதிர்பார்க்கிறாங்களோ அதே மாதிரியான ஒரு கதாபாத்திரம்தான் முல்லை. குடும்பப் பொண்ணுக்கு உதாரணம்னா அது முல்லைதான். அதனால்தான் ரசிகர்களுக்கு என்னைப் பிடிக்குது. இப்பல்லாம் நான் வெளிய எங்கயாச்சும் ஜீன்ஸ் டாப்ஸ் போட்டுப் போகும்போது ரசிகைகள் யாராச்சும் பார்த்தா, “என்ன இப்படி டிரெஸ் பண்ணியிருக்க? ஒழுங்கா புடவை கட்டிட்டு வா”னு அவங்க வீட்டுப் பொண்ணுக்குச் சொல்ற மாதிரி செல்லமா மிரட்டுறாங்க. இந்த அன்பைவிட ஒரு நடிகைக்கு வேற என்ன வேணும்!?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE