க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in
யதார்த்த நடிப்பில் தடம் பதித்த விஜய் சேதுபதியை ‘றெக்க’ படத்தின் மூலம் மாஸ் ஆக் ஷன் ஹீரோவாக மாற்றியவர் ரத்தின சிவா. ஒரு இடைவெளிக்குப் பின்னர், ஜீவா நடிக்கும் ‘சீறு’ படத்துடன் மீண்டும் வருகிறார். படத்தின் எடிட்டிங் வேலைகளில் மும்முரமாக மூழ்கியிருந்தவரைக் ‘காமதேனு’வுக்காகச் சந்தித்தேன். அவரது பேட்டி:
‘றெக்க’ படத்துக்குப் பிறகு ஏன் நான்கு வருட இடைவெளி?
வெளியே இருந்து பார்த்தால் இது இடைவெளி மாதிரி இருக்கலாம். ஆனா, நான் கதைக்காகக் காத்திருந்த காலகட்டம் அது. என்னைப் பொறுத்தவரை நான் தொடர்ந்து இயங்கிட்டுதான் இருக்கேன். கதைக்கான ஐடியா முதல்ல கிடைக்கணும். அப்புறம் அதைத் திரைக்கதையா மாற்றணும். அதுக்கு எனக்குக் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுது. அவசரப்பட்டு அடுத்தடுத்துப் படங்கள் பண்ணுறதைவிட தேர்ந்தெடுத்து சில படங்கள் பண்ணினாலே போதும்ங்கிறது என் எண்ணம்.