நான் துணிச்சலான பொண்ணு!- `பாண்டவர் இல்லம்' ஆர்த்தி சுபாஷ்

By காமதேனு

பகத்பாரதி
readers@kamadenu.in

சன் டிவியின் ‘பாண்டவர் இல்லம்’ தொடரில் இரண்டாவது நாயகியாக நடிக்கும் ஆர்த்தி சுபாஷ், விஜேவாக இருந்து சீரியல் பக்கம் நகர்ந்தவர். இருக்கும் இடத்தைக் கலகலப்பாக வைத்துக்கொள்வதில் இயல்பான ஈடுபாடு காட்டுபவர். படப்பிடிப்பில் துளிப் பதற்றமும் இல்லாமல் நடித்துவிட்டு வந்தவரைப் பேட்டிக்காகச் சந்தித்தோம். அவரிடம் பேசியதிலிருந்து…

படிக்கும்போதே சின்னத்திரை பக்கம் வந்துட்டீங்கன்னு கேள்விப்பட்டோம். அதைப் பற்றிச் சொல்லுங்கள்…

சின்ன வயசுல இருந்தே எனக்கு ஆங்கரிங்  பண்ணணும்னு ஆசை.  “ஒரு நாள் என்னை நீங்க டிவியில் பார்ப்பீங்க பாருங்க”ன்னு எல்லோர்கிட்டேயும் சொல்லிட்டே இருப்பேன். என் அப்பாவுக்கோ நான் நியூஸ் ரீடராகணும்னு ஆசை. ஆனா, எனக்குச் செய்தி வாசிக்கிறதெல்லாம் சுத்தமா தெரியாது. அதனால அதை முயற்சி செஞ்சுகூட பார்க்கலை. மக்கள் டிவியில ஒரு நிகழ்ச்சிக்கு ஆங்கரிங் பண்ண கூப்பிட்டாங்க. அப்போ நான் கல்லூரி ரெண்டாவது வருஷம் படிச்சிட்டு இருந்தேன். சரி முயற்சி பண்ணலாம்னு முடிவெடுத்தேன். மக்கள் டிவி நிகழ்ச்சியில முழுக்க முழுக்கத் தமிழ்லேயே பேசணும். எனக்குத் தமிழ் ரொம்பப் பிடிக்கும். கிட்டத்தட்ட ஒரு வருஷம் மக்கள் டிவியில ஆங்கரிங் பண்ணினேன். அப்புறம் பொதிகை டிவி, புதுயுகம் சேனல்ல சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE