பட்டாஸ் - திரை விமர்சனம்

By காமதேனு

தந்தையைக் கொன்ற வில்லனைப் பழிவாங்கி, தாயின் சபதத்தை நிறைவேற்றும் மகனின் கதைதான் ‘பட்டாஸ்’.

அப்பா, மகன் என இரட்டை வேடங்களில், அந்தந்த கதாபாத்திரங்களுக்குத் தேவையானதை 100 சதவீதம் தந்துள்ளார் தனுஷ். ‘ஆடியோ திருடனாக’ க்ளூ கொடுத்து திருடிவிட்டு அதே திருட்டுக்கு போலீஸ் இன்ஃபார்மராகவும் இருக்கும் இடத்தில் இளமையையும், அடிமுறை கலையைக் கற்று வித்தைகாட்டும் இடத்தில் முதிர்ச்சியான நடிப்பையும் வெளிப்படுத்துகிறார் தனுஷ். மகன் தனுஷுக்கு நண்பராக வரும் சதீஸ் ஆங்காங்கே கிச்சுகிச்சு மூட்டுகிறார்.

தனுஷுக்கு இணையான பாத்திரம் சினேகாவுக்கு. அவரும் தன் பங்களிப்பை உணர்ந்து மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். தன் பையைப் பறிக்கவரும் காவலர்களைத் தாக்குவது, அடிமுறைக் கலையைச் செய்துகொண்டே தனுஷின் கழுத்தில் கத்திவைத்து காதலைச் சொல்லும் இடம், மகனை முதன்முதலில் பார்த்ததும் தடுமாறுவது, அடிமுறை கற்றபெண்ணாக கெத்தாக மிளிர்வது என சினேகா பல இடங்களில் கவனிக்க வைக்கிறார்.

நாயகி மெஹ்ரின் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரிதாக ஈர்க்கவில்லை. அதிலும் நாயகி அறிமுகத்தில் சாதனா என்கிற புள்ளபூச்சி என்று காட்டிவிட்டு, அவர் வேலை கிடைத்தபின்பு போடும் ஆட்டத்தை ஒப்பிட்டு தொகுப்புபோல் காட்டும் காட்சிகள் குறும்படத்தன்மையில் இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE