கேன்ஸ் சென்ற ‘பயமறியா பிரம்மை’

By KU BUREAU

அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கியுள்ள படம், 'பயமறியா பிரம்மை'. இதில் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

நந்தா- வி.பிரவீன் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு கே இசையமைத்துள்ளார். கிரைம் த்ரில்லர் வகையிலான இந்தப் படத்தை 69 எம்.எம். ஃபிலிம் நிறுவனம் சார்பில் ஜெகதீஷ், ராகுல் கபாலி இணைந்து தயாரித்துள்ளனர்.

பல நாடுகளில் நடைபெற்ற சர்வதேசப் பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வென்றுள்ள இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE