`ராம்' எனும் படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்கிறார் த்ரிஷா. ஜித்து ஜோசப் இயக்கும் இப்படத்தில் பிராச்சி தெஹ்லானும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மம்மூட்டியுடன் ‘மாமாங்கம்’ படத்தில் நாயகியாக நடித்திருக்கும் பிராச்சி, இந்தியக் கூடைப்பந்து அணியின் முன்னாள் வீராங்கனை என்பதையும் சொல்லியாக வேண்டும்.
`பிக்பாஸ்' மகத் கூட சுத்துச்சே... அந்தப் பொண்ணா?
ரஜினியின் ‘நெற்றிக்கண்’ படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படுவதாக சமீபத்தில் சொன்னார் தனுஷ். ‘நெற்றிக்கண்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லட்சுமி, மேனகா, சரிதா ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்தப்படம் ரீமேக் ஆனால் மேனகா கதா
பாத்திரத்தில் அவரது மகள் கீர்த்தி சுரேஷ் தான் நடிக்க வேண்டும் என்று இப்போதே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் துண்டுபோட்டு இடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
த்ரிஷ், நயன் உஷார்... இல்லாட்டி உங்கள லட்சுமியாக்கிடுவாங்க...