கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களின் ட்ரெய்லர்கள், யூ-டியூபில் எத்தனை மில்லியன் முறை பார்க்கப்படுகின்றன என்றுதான் ரசிகர்களுக்கு இடையே வழக்கமாக சண்டை நடக்கும். வழக்கமான இந்தச் சந்தடிக்கு இடையில் சமீபத்தில் ‘ஜாஸ்மின்’ பட ட்ரெய்லர் வெளியாகி 1 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது. படத்தில் சித் ராம் பாடியிருக்கும் ‘லேசா வலிச்சுதா’ பாடல் 2 மில்லியன் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியிருக்கிறது. இப்படத்தின் அறிமுக நாயகி அனிகா, பொள்ளாச்சி மயிலாடுதுறை பெரியணைக்கு தனது அடுத்த படமான ‘எங்க பாட்டன் சொத்து’ படப்பிடிப்புக்காக வந்திருந்தார். அவருடன் ஒரு பேட்டி:
உங்களோட முதல் படமான ‘ஜாஸ்மின்’ இன்னும் ரிலீஸே ஆகல... அதுக்குள்ள ரெண்டாவது படத்தோட ஷூட்டிங்கும் முடிஞ்சிடுச்சே?
உண்மையில, இது எனக்கு மூணாவது படம். முதல் படம் ‘ஜாஸ்மின்’. அதோட ட்ரெய்லர், சிங்கிள் ட்ராக் எல்லாம் ரிலீஸ் ஆகி ஹிட் அடிச்சிருக்கு. அநேகமா அதோட முழு பாடல் வெளியீடு ஜனவரியில இருக்கும். அதுக்கப்புறம் ‘க்’ படத்துல நடிச்சிருக்கேன். ‘ஜீவி’ படத்தோட கதாசிரியர் பாபு தமிழ்தான் இயக்குநர். ஷூட்டிங் சமீபத்துலதான் முடிஞ்சுது. இந்த மூணு படங்களும் இனிமேதான் வெளியாகணும். சுருக்கமா சொன்னா 2019 முழுக்க ஷூட்டிங். 2020 முழுக்க ரிலீஸ். அது எனக்கு ஆச்சரியமாவும், சந்தோஷமாவும் இருக்கு.