சீரியல் படைப்பாளிகளுக்கு ஒரு திறந்த மடல்...

By காமதேனு

பகத்பாரதி
readers@kamadenu.in

பக்கத்து வீட்டுச் சிறுமி எப்போதும் துறுதுறுவென இருப்பவள். பொது விஷயங்களைப் பற்றி ஏதாவது கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பாள். சில நாட்களாக அவளிடம் பழைய உற்சாகத்தைப் பார்க்க முடியவில்லை. அருகில் அழைத்து விசாரித்தேன். “ஆன்ட்டி… அந்த சீரியல்ல வர்ற கறுப்பு கலர் பொண்ணை எல்லாரும் திட்டுறாங்க. அந்தப் பொண்ணுக்குக் கல்யாணமே ஆகாதுங்கிற மாதிரி சீரியல்ல காட்டுறாங்க… நானும் கறுப்புதானே… எனக்கும் கல்யாணம் ஆகாதா?” என்று அந்தச் சின்னஞ்சிறுமி கேட்டபோது அதிர்ந்து போனேன்.

நிறம், உடல் பருமன், உடல் குறைபாடுகள் போன்றவற்றை மூலதனமாக வைத்து இன்றைக்குப் பரபரப்பான சீரியல்கள் படையெடுக்கின்றன. மனிதர்களின் வாழ்வில், குறிப்பாகப் பெண்களின் வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவரும் சீரியல்கள், யதார்த்தத்தைக் காட்டுகிறோம் என்ற பெயரில் இப்போது சிறார்களையும் சிதைக்கத் தொடங்கியிருப்பதை எப்படி எடுத்துக்கொள்வது? மனிதர்களின் நுட்பமான மன உணர்வுகளைக் கொச்சைப்படுத்தி, மலினமான ரசனையுடன் உருவாக்கப்படும் சீரியல்கள் உண்மையில் என்னதான் சொல்லவருகின்றன?

இதுதான் கலையா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE