எனக்குள் பல ஜெமினி கணேசன்கள்!- சீனியர் ஹீரோ ‘சில்லுக் கருப்பட்டி’ ஸ்ரீராம்

By காமதேனு

க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

பெரு விருந்தின் கடைசியில் வைக்கப்படும் இனிப்பு போல் இவ்வருடத்தின் கடைசி வாரத்தில் வெளியாகி ரசிகர்கள் மனதில் தித்திப்பாய் இனித்துக்கொண்டிருக்கும் படம் ‘சில்லுக் கருப்பட்டி’. இப்படத்தில் வயதான ரொமான்டிக் ஹீரோவாக(!) கவனம் ஈர்த்துள்ளார் ஸ்ரீராம். அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். “படத்துலதான் காதல், ரொமான்ஸ் எல்லாம். நிஜத்துல நான் அடிதடி பார்ட்டி” என்றவாரே தனது ‘க்ரவ் மகா’ தற்காப்புப் பயிற்சிப் பள்ளியினுள், இடுப்பில் தன் பேரனை அணைத்தபடி அழைத்துப் போகிறார். தன்னுடைய மாணவரின் மேற்பார்வையில் பேரனை விளையாட விட்டுவிட்டு உரையாடத் தொடங்குகிறார்.
    
அதென்ன ‘க்ரவ் மகா’ பெயரே வித்தியாசமா இருக்கே? இந்தக் கலையைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க…

இந்தத் தற்காப்புக் கலை 1940-கள்ல இஸ்ரேல் நாட்டுல இமி என்பவரால் உருவாக்கப்பட்டது. கராத்தே, குத்துச்சண்டை, மல்யுத்தம், அகிடோ, ஜூடோ மாதிரியான தற்காப்புக் கலைகளோட ப்ளஸ் பாயின்ட்ஸை மட்டும் எடுத்துக்கிட்டு உருவாக்கப்பட்ட கலவை க்ரவ் மகா. தற்காப்புக் கலைகளுக்குன்னு நிறைய விதிமுறைகள் இருக்கு. ஆனா, ஒரு தெருச் சண்டையில அதெல்லாம் நமக்கு உதவாது. 
அன்றாட வாழ்க்கையில அசாதாரணமான சூழல் உருவானால், அதை எதிர்கொள்வது எப்படின்னு சொல்லித்தர்ற கலை இது.
தமிழ்நாடு போலீஸ் படை, தேசியப் பாதுகாப்புப் படைகளுக்கு என் குழு தான் ‘க்ரவ் மகா’ பயிற்சி தர்றோம். நடிகர்களுக்கும் சொல்லிக்கொடுக்கிறோம். ‘இமைக்கா நொடிகள்’ படத்துக்காக அனுராக் காஷ்யப் என்கிட்ட பயிற்சி எடுத்துக்கிட்டார். அமலா பாலுக்கு ‘அதோ அந்தப் பறவை போல’ படத்துக்காகப் பயிற்சி கொடுத்தேன். அரவிந்த் சாமியும் இந்தக் கலையை ஆர்வமா கத்துக்கிறார்.

நீங்க எப்போ ‘க்ரவ் மகா’ கத்துக்க ஆரம்பிச்சீங்க?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE