உங்களுக்கு ஹீரோயினா நடிக்கணும்!- ரஜினியைச் சிரிக்கவைத்த பேபி மானஸ்வி

By காமதேனு

க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

தமிழ் சினிமாவில் நம்பிக்கை தரும் குழந்தை நட்சத்திரமாக வலம் வருபவர் மானஸ்வி. அறிமுகமான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில், “சொட்ட…சொருகிடுவேன்” என்று போலீஸ்காரரைப் பார்த்து சீறும் காட்சி மூலம் ரசிகர்களைக் கவனிக்கவைத்தவர். சமீபத்தில் வெளியான ‘இருட்டு’ படத்தில் இவரின் நடிப்புக்குத் திரும்பிய திசைகளிலிருந்தெல்லாம் வந்து குவிகின்றன வாழ்த்துப் பூங்கொத்துகள். நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகளான மானஸ்வியைச் சந்தித்துப் பேசினேன். ஆங்காங்கே குழந்தைத்தனம் இழையோடினாலும், கருத்தில் தெளிவு மிளிர்கிறது.

‘இருட்டு’ படத்துல க்ளைமாக்ஸ் காட்சியில மிரட்டிட்டீங்களே… நடிக்கும்போது பயமா இல்லையா?

பயமே இல்லை… அப்பா எப்படி நடிக்கணும்னு சொல்லிக்கொடுத்தார். ஜன்னலுக்கு வெளியே கம்பியில தொங்கும்போது என் உடம்புல பெல்ட் கட்டி ரோப்ல தொங்கவிட்டாங்க. அப்பா பயந்துபோய், “வேணாம்டா பாப்பா”னு சொன்னார்… எனக்கு அதுல தொங்குறது ஊஞ்சல்ல தொங்குற மாதிரி ஜாலியா இருந்துச்சு. நானே பண்றேன்னு சொல்லிட்டேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE