அம்மா கேரக்டரில் நடிக்க தயங்கினேன் - மீரா கிருஷ்ணன்

By காமதேனு

பகத்பாரதி
readers@kamadenu.in

‘பொக்கிஷம்’ நெடுந்தொடர் மூலம் தமிழக சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமான மீரா கிருஷ்ணன், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நாயகி’ தொடரில் அன்பான மாமியாராக வருகிறார். அந்தி சாயும் பொழுதில் படப்பிடிப்பில் பொறுப்பாய் நடித்துக்கொண்டே, கிடைத்த பிரேக்கில் கலகலப்பாய் நம்முடன் பேசத் தொடங்கினார். அவரிடம் பேசியதிலிருந்து…
    
மலையாளப் பட நாயகி நீங்க… தமிழ் சீரியல் பக்கம் வந்தது எப்படி?

என் பூர்விகம் கேரளா. சின்ன வயசுல இருந்தே நடிப்பு மேல தீராக் காதல் உண்டு. நான் கிளாசிகல் டான்ஸர். அதனால இயற்கையாவே பாவனைகள் எல்லாம் பக்காவா பண்ணுவேன். மலையாளத்துல ‘மார்க்கம்’ படத்துல நாயகியா நடிக்கிற வாய்ப்புக் கிடைச்சுது. தொடர்ந்து சில படங்கள்ல நடிச்சேன். அப்புறம் படிப்புக்காக பிரேக் எடுத்தேன். படிப்பு முடிஞ்சதும் திருமணமாகி சென்னைக்கு வந்துட்டேன். ராகவா லாரன்ஸிடம் கோ டைரக்டரா இருக்கார் என் கணவர். திடீர்னு ‘பொக்கிஷம்' சீரியல்ல பிரதான பாத்திரத்துல நடிக்கிற வாய்ப்புக் கிடைச்சது. அந்த சீரியல்ல கொஞ்ச நாள் நடிச்சேன். அப்புறம் குழந்தைகளைப் பார்த்துக்கிறதுக்காக சினிமா, சீரியல் எதுவும் வேண்டாம்னு விலகியிருந்தேன்.

    
‘நாயகி’ சீரியல் வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE