அந்த சீன்ல அத்தனை கடவுளையும் வேண்டிக்கிட்டேன்!- ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' ஸ்வாதி சுவாரசியம்

By காமதேனு

பகத்பாரதி
readers@kamadenu.in

குண்டாக இருப்பவர்கள் கதாநாயகியாக நடிக்க முடியாது எனும் பொதுப்புத்தியை உடைத்து அனைவரையும் கவர்ந்த நெடுந்தொடர், ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி'. இதில் எதிர்மறை நாயகியாகவும், அன்பான மருமகளாகவும் வலம் வந்துகொண்டிருப்பவர் ஸ்வாதி. ஐடி துறையிலிருந்து கலையுலகத்துக்கு வந்த மற்றுமொரு தாரகை இவர். பார்க்க அமைதியான பெண்ணாக இருக்கும் ஸ்வாதி, ‘ரெடி டேக்’ என்றதும் வெளுத்து வாங்குகிறார். அவருடன் ஒரு பேட்டி:

ஐடி வேலை டு நடிகை… எப்படி சாத்தியமாச்சு?

எனக்குச் சொந்த ஊர் பெங்களூரு. எம்பிஏ முடிச்சிட்டு அங்கேயே ஒரு ஐடி கம்பெனியில வேலை பார்த்துட்டு இருந்தேன். சின்ன வயசுல இருந்தே ஆங்கரிங் மேல ஈர்ப்பு இருந்துச்சு. மூணு வருஷம் ஐடி வேலைல இருந்ததுக்கு அப்புறம், அந்த வேலையை விட்டுட்டு ஆங்கரிங் பண்ணலாம்னு முடிவு எடுத்தேன். முதல் முயற்சியிலேயே கன்னட சேனல்ல ஆங்கரிங் பண்ற வாய்ப்புக் கிடைச்சது. அதன் மூலமா கன்னடத்துல ஒரு சீரியல்ல நடிக்கவும் வாய்ப்புக் கிடைச்சது. அப்படித்தான் ஆரம்பிச்சது என்னோட பயணம்!
    
'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' சீரியல் அனுபவம்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE