ஆதித்ய வர்மா - திரை விமர்சனம்

By காமதேனு

காமதேனு விமர்சனக் குழு
readers@kamadenu.in

கோபம், குடி, காதல்... இந்த மூன்றும் ஒரு இளைஞனின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதுதான் ‘ஆதித்ய வர்மா.’

எல்லாவற்றிலும் ஹீரோவாக ஜொலிக்கும் மருத்துவக் கல்லூரி மாணவரான துருவ், கோபத்தைக் கட்டுப்படுத்துவதில் ஜீரோ. கால்பந்து போட்டியில் எதிரணி வீரரை மூர்க்கமாக தாக்கி கல்லூரியில் இருந்து டிஸ்மிஸ் ஆக வேண்டிய நேரத்தில், அழகான அப்பாவி முகம் கொண்ட மாணவியைச் சந்திக்கிறார். பார்த்ததும் காதல். அதனால் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு, கல்லூரியிலேயே தொடர்கிறார் துருவ். பிறகு, இருவருக்கும் இடையில் லிவிங் டுகெதர் என்பதையும் தாண்டிய ஒரு உறவு. அப்படியான காதலில் திடீரெனப் பிரிவு ஏற்பட, நாயகன் குடிநோயாளியாகிறார். அப்புறம் என்னானது என்பதே கதை.

துருவ்க்கு முதல் படத்திலேயே யதார்த்த நடிப்பு கைகூடியுள்ளது. அறிமுக நடிகர் என்று சொல்லவே முடியாத நடிப்பு. கோபம், காதல், போதை, காமம், குரோதம் என எல்லாவிதமான உணர்வுகளையும் சரியாகப் பிரதிபலிக்கிறார். அவ்வப்போது அப்பாவின் சாயலையும் குரலையும் நினைவுபடுத்துகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE