சூர்யாவுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கணும்!- `ஆயுத எழுத்து' ஆட்சியர் ஸ்ரீத்து கிருஷ்ணன்

By காமதேனு

பகத்பாரதி
readers@kamadenu.in

`ஆயுத எழுத்து' தொடர் படப்பிடிப்பில் கண்டிப்பான ஆட்சியராக அனைவரையும் மிரட்டிக்கொண்டிருந்தார் ஸ்ரீத்து கிருஷ்ணன். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் இந்தத் தொடரில், அதர்மங்களைப் பொறுத்துக் கொள்ளாத ஆட்சியராக நடித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீத்து, ஆன்-ஸ்க்ரீனில்தான் அதிகாரத் தோரணை காட்டுகிறார். ஆஃப்-ஸ்க்ரீனில் அத்தனை அடக்கமான பெண்ணாக இயல்பாகப் பேசுகிறார். அவருடன் ஒரு பேட்டி.

‘7c’ தொடரில் ஆரம்பிச்ச உங்க பயணம் ‘ஆயுத எழுத்து’ வரைக்கும் வந்திருக்கு. இதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?

என்னோட சொந்த ஊர் கேரளாவாக இருந்தாலும் வளர்ந்தது சென்னையிலதான். ஏழாம் வகுப்பு படிச்சிட்டு இருக்கும்போது  ‘7c’ சீரியல்ல நடிக்கிற வாய்ப்புக் கிடைச்சுது. அந்த சீரியல்ல நடிக்கும்போது நடிப்புன்னா என்னன்னே தெரியாது. அந்த சீரியலுடைய டைரக்டர் பிரம்மா சார்தான் நடிக்கக் கத்துக்கொடுத்தார். அவருக்கு முதல்ல நன்றி சொல்லியே ஆகணும். அவராலதான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE