மீம்ஸால் மீண்டுவந்த வைகைப் புயல்!- தமிழ்த் திரையின் தனிப்பெரும் கலைஞன்

By காமதேனு

சந்தனார்
readers@kamadenu.in

ஹாலிவுட் திரையுலகில் பல ஆண்டுகள் சின்னச் சின்ன பாத்திரங்களிலேயே நடித்துவிட்டு, 40 அல்லது 50 வயதுக்குப் பின்னர் அட்டகாசமான பாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர்கள் உண்டு. ஆனால், திரையில் தீவிரமான பங்களிப்பு கிட்டத்தட்ட நின்றே போய்விட்ட சூழலில், ரசிகர்கள் மத்தியில் அனுதினமும் பேசப்படும் நடிகர்கள் மிகக் குறைவு. ‘தி டார்க் நைட்’ (2008) படத்தில் ‘ஜோக்கர்’ கதாபாத்திரத்தில் நடித்த ஹீத் லெட்ஜர் போல் அன்றாட மீம்ஸில் இடம்பெறும் ஓரிரண்டு உதாரணர்களைச் சொல்ல முடியும். அப்படி, தமிழில் நமக்கெல்லாம் ஒரு வாழும் உதாரணமாக இருப்பவர் வடிவேலு.

வீழ்ச்சிக்குப் பிறகான வெற்றி

வாழ்க்கையின் அவலத் தருணங்களில் சிக்கியிருப்பவர்களின் மனதில் வந்துபோகும் காட்சிகள் பெரும்பான்மையானவை வடிவேலுவுடையவை என்பதுதான் அவரது தனித்தன்மை. சில அரசியல் காரணங்களால், பட வாய்ப்புகளை வடிவேலு இழந்தது நகைச்சுவைத் துறைக்குப் பெரும் பின்னடைவுதான். ஆனால், காலம் வடிவேலுவுக்கு வேறு பல வாசல்களைத் திறந்துவிட்டு நம்மைக் காப்பாற்றியிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE