வக்கிர ‘கேம்’களைப் பேசும் படம் இது- ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி

By காமதேனு

க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

“இந்த உலகமே ஒரு விளையாட்டுக் களம்தான். இங்கே தோற்கிறவனை ஜெயிக்கிறவன் சுரண்டிப் பிழைக்கிறான். தோற்கிறது பெண்ணாகவும், ஜெயிக்கிறது ஆணாகவும் இருந்தா அங்கே பாலியல் ரீதியான சுரண்டல் நடக்கும். ஆனா, தோத்துட்டு இருக்கும் பெண் ஒரு நாள் ஜெயிச்சிட்டா என்னவாகும்னு சொல்றதுதான் இந்தப் படத்தோட கதை” என்று சீரியஸாகப் பேசுகிறார் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி. ‘தாதா 87’ படத்துக்குப் பிறகு இவர் இயக்கும் இரண்டாவது படம் இது.
    
‘பப்ஜி’ கேமை வைத்து திரைக்கதை அமைக்கும் எண்ணம் எப்படி வந்தது?

‘தாதா 87' படத்துக்கு அப்புறம் பல வாய்ப்புகள் வந்தன. ‘பீட்டர்’ அப்படின்னு ஒரு படம் எடுக்க ஆரம்பிச்சேன். ஷூட்டிங் வேலைகள் கொஞ்சம் இழுத்துக்கிட்டே போற மாதிரி இருந்ததால, அதைக் கொஞ்சம் தள்ளிவச்சிட்டு வேற படம் பண்ணலாம்னு நினைச்சேன். அந்த நேரத்தில்தான் பப்ஜி கேம் ரொம்ப ஃபேமஸ் ஆச்சு. சரி, கேமை மையமாக வச்சு ஒரு கதை பண்ணலாம்னு யோசிச்சதுதான் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தோட கதை. ‘ப்ளூவேல்’ மாதிரியான சில கேம்கள்தான் நமக்குத் தெரிந்து தடை செய்யப்பட்டிருக்கு. தடை செய்யப்படாத எத்தனையோ கேம்கள் வக்கிரமும் வன்முறையுமா இயங்கிக்கிட்டு இருக்கு. அந்த விஷயங்களை எல்லாம் கலந்ததுதான் இந்தப் படம்.

அப்படின்னா இது ‘அடல்ட்ஸ் ஒன்லி’ படமா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE