அறம் நயன்தாரா ரோலில் நடிக்கணும்- ‘அழகு’ வில்லி சங்கீதாவின் ஆசை

By காமதேனு

பகத்பாரதி
readers@kamadenu.in

‘சன் மியூசிக்’கில் ஜாலியான விஜேவாக வலம் வந்தவர் சங்கீதா. தற்போது சன் டிவியின் ‘அழகு' நெடுந்தொடரில் எதிர்மறை நாயகியாக நடித்து மிரட்டிக்கொண்டிருக்கிறார். செட்டில் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தவர், ‘ஷாட் ரெடி’ என்றதும் கோபக்காரப் பெண்ணாக மாறி முறைக்கத் தொடங்கிவிட்டார். தனது சின்னத் திரைப் பயணம் குறித்து சுட்டித்தனம் மாறாமல் இயல்பாகப் பேசுகிறார். அவரது பேட்டி:

ஆங்கரிங் டு சீரியல் பயணம் எப்படிச் சாத்தியமானது?

ஆங்கரிங்தான் என் மனசுக்குப் பிடிச்ச வேலை. அந்தக் கனவோடதான் மீடியா ஃபீல்டுக்குள்ளே நுழைஞ்சேன். ஒரு நாள் என் ஃப்ரெண்ட்ஸ் ‘அழகு’ சீரியலுக்கான ஆடிஷன்ல என்னைக் கலந்துக்கச் சொன்னாங்க. சரி முயற்சி பண்ணி பார்க்கலாம்னு போனேன். செலக்ட் பண்ணிட்டாங்க. இப்படித்தான் சீரியலுக்குள்ளே என்ட்ரியானேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE