மரத்தைச் சுத்தி பாடிட்டுப் போறது மட்டும் ஹீரோயினோட வேலையில்லை! - நடிகையான குரல் கலைஞர் ரவீனா ரவி

By காமதேனு

க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

குரோட்டன்ஸ் செடிகளுக்கு மத்தியில் பாத்தி வெட்டியது போல் இருக்கும் அந்த வாயிலைக் கடந்து போனால், சென்னையின் ஜன சந்தடியிலிருந்து தனித்து அத்தனை அமைதியாய் இருக்கிறது அந்த டப்பிங் ஸ்டுடியோ. தான் நடித்த ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்துக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தார், டப்பிங் கலைஞராக இருந்து கதாநாயகியாகப் பரிணமித்திருக்கும் ரவீனா ரவி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளத்திலும் பல நடிகைகளுக்குக் குரல் கொடுப்பவர். எந்த வித அலட்டலும் இல்லாமல் இயல்பாய் பேச ஆரம்பித்தார்.

டப்பிங் கலைஞர் டு கதாநாயகி. எப்படி இருக்கு இந்த மாற்றம்?

டப்பிங் கலைஞரா இருந்த சமயத்துல எல்லாம் ஈஸியா இருந்துச்சு. ஏ.சி ரூமுக்குள் சோஃபாவுல உட்கார்ந்து ஜாலியா பேசிட்டுப் போய்டுவேன். ஆனா, நடிக்க ஆரம்பிச்ச பிறகு வெயில் மழைன்னு ஷூட்டிங்ல இருக்க வேண்டியிருக்கு. வானமே இடிஞ்சு விழுந்தாலும் நைட் பத்து மணிக்குத் தூங்க ஆரம்பிச்சிடுவேன். ஆனா, இப்ப நைட் ஷூட் எல்லாம் போக வேண்டியிருக்கு. கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும். ஆனா, டைரக்டர் ஆக்‌ஷன் சொன்ன அடுத்த நிமிஷம் தூக்கக் கலக்கம் எங்கே போகும்னே தெரியாது. முன்னாடி எல்லாம் வெளில ஈஸியா போயிட்டு வருவேன். இப்போ எல்லாம் வெளிய போனா, “நீங்க ‘ஒரு கிடாயின் கருணை மனு’ ஹீரோயின்தானே”னு உரிமையா ரசிகர்கள் பேசுறாங்க. வாழ்க்கையில் சந்தோஷங்கள் அதிகமாகியிருக்கு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE