நல்ல சினிமாவைக் காதலிக்கும் ரசிகன் விஜய் சேதுபதி!- வசுந்தரா காஷ்யப் புகழாரம்

By காமதேனு

க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

பச்சைப் பசேல் என பரந்துவிரிந்த வயலின் நடுவே, மண்வெட்டியும் கையுமாகப் பாத்தி வெட்டிக்கொண்டிருந்த வசுந்தரா காஷ்யப்பைப் பார்த்தவர்கள், அவர் ஒரு நடிகை என்றே நம்பியிருக்க மாட்டார்கள். அந்த அளவுக்குக் கிராமத்து விவசாயப் பெண்ணாக மாறியிருந்தார். ‘பக்ரீத்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பு தந்த உற்சாகத்தில், ‘வாழ்க விவசாயி’ படப்பிடிப்பில் மும்முரமாக இருந்த வசுந்தராவுடன் ஒரு பேட்டி:

‘வாழ்க விவசாயி’ என்ன மாதிரியான படம்?

இன்னைக்கு விவசாயத்தைப் பத்தி பேசுறது ஃபேஷன் ஆகிடுச்சு. ஆனா விவசாயிகளின் அடிப்படைப் பிரச்சினை பத்தி யாரும் பேசுறதில்லை. வாழ்க்கையில எல்லாத்தையும் வெறுத்துத் தற்கொலை பண்ணிக்கும் நிலைக்கு விவசாயி ஏன் போறான்னு சொல்ற படம்தான் ‘வாழ்க விவசாயி’. இதுல அப்புக்குட்டிக்கு ஜோடியா நடிக்கிறேன். “முன்னணி ஹீரோக்கள்கூட நடிச்சிட்டு அப்புக்குட்டிகூட ஏன் நடிக்கிறீங்க”னு பலர் கேட்டாங்க. சினிமாவைப் பொறுத்தவரை, நடிகர்களோட தோற்றத்தைவிடக் கதையம்சம்தான் முக்கியம். ரொம்ப முக்கியமான விஷயத்தைப் பேசுற கதைங்கிறதாலதான் இந்தப் படத்துல நடிக்கிறேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE