ஹீரோவும் நானே வில்லனும் நானே!- ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ புவியரசு

By காமதேனு

உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@hindutamil.co.in

ஒல்லியான தேகம் அப்பாவி முகமாய், கல்லூரி பையன் தோற்றத்தில் இருக்கும் புவியரசு, ஜீ தமிழின் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ நெடுந்தொடரில் வில்லன் இனியனாகக் கலக்குபவர். படப்பிடிப்புத் தளத்தில் நாயகி ராசாத்தியிடம் குரலை உயர்த்தி ஏதோ பேசிக்கொண்டிருந்தவரை இடைமறித்து, “என்னங்க இப்படி மிரட்டுறீங்க?”என்று கேட்டால், “அய்யோ… எல்லாம் நடிப்புங்க. நிஜத்துல நான் ரொம்ப நல்ல பையன்” என்று புன்சிரிப்புடன் கைகுலுக்குகிறார் புவியரசு.

‘அழகிய தமிழ் மகள்’ சீரியல்ல ஜீவா பாத்திரத்துல நடிச்சு, ரசிகைகள் மத்தியில நல்ல பேர் வாங்கியிருந்தீங்க. இப்போ வில்லனா நடிக்கிறதுக்கு எப்படி ஒத்துக்கிட்டீங்க?

உண்மையிலேயே அந்த பயம் ஆரம்பத்துல இருக்கத்தான் செஞ்சுது. ஏற்கெனவே இனியன் கேரக்டர்ல வேறொருத்தர் நடிச்சிட்டு இருந்தார். அவருக்குப் பதிலாத்தான் நான் நடிக்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல ரொம்ப யோசிச்சேன். ஆனா, நடிக்கிறதுக்கு நெறைய ஸ்கோப் உள்ள ரோல் இனியன்னு இப்பதான் தெரியுது. ஹீரோவா நடிக்கும்போது, அந்தக் கேரக்டருக்கு என்ன எக்ஸ்பிரஷன் காட்ட முடியுமோ அவ்வளவுதான் காட்டலாம். ஆனா, நெகட்டிவ் ஷேடுல நடிக்கும்போது நடிப்புக்கு நிறைய ஸ்கோப் இருக்கும். மத்தபடி, சீரியலோட ஹீரோ, வில்லன் ரெண்டுமே நான்தான். அதனால, எப்பவும் என்னோட ரசிகைகளுக்கு நான் ஃபேவரைட்தான்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE