டைட்டிலை வச்சு முடிவு பண்ணிடாதீங்க!- ‘நானும் சிங்கிள்தான்’ இயக்குநர் கோபி

By காமதேனு

உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@hindutamil.co.in

நெடுந்தொடர்கள், வெப் சீரிஸ் என்று இயங்கிக்கொண்டிருந்த கோபி, ‘நானும் சிங்கிள் தான்’ படம் மூலம் வெள்ளித்திரை இயக்குநராகியிருக்கிறார். படத்தின் டீஸர் வெளியீட்டுப் பணியில் இருந்தவர் காமதேனுவுக்காகவும் கொஞ்சம் பேசினார்.

டைட்டிலே வித்தியாசமா இருக்கு. கதை என்ன?

90-ஸ் கிட்ஸ்னு அழைக்கப்படுற இளைஞர்களோட வாழ்க்கையைப் பிரதிபலிக்கிற கதை இது. இன்னைக்குப் பலரும் ‘நான் சிங்கிள்’ங்கிறதை ஸ்டேட்டஸா வச்சிட்டு சுத்துறாங்க. பலர் திருமணத்தை 30 வயசுக்கு மேலே தள்ளிப் போடுறாங்க. அதோட, சாதக - பாதகங்களைப் படத்துல ஜாலியா சொல்லியிருக்கேன். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE