நிஜத்திலும் நான் சுட்டிப் பொண்ணுதான்!- ‘மலர்’ வைஷ்ணவி கலகல

By காமதேனு

உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@hindutamil.co.in

நெடுந்தொடர்களில் நிறைய நட்சத்திரங்கள் இருந்தாலும், சில நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதுக்கு ரொம்பவே நெருக்கமாகிவிடுவார்கள். ‘கலர்ஸ் தமிழ்’ சேனலின் ‘மலர்’ தொடரில், நாயகியின் சுட்டித் தங்கை சுவாதியாக நடித்துக் கலகலப்பூட்டிவரும் வைஷ்ணவி அப்படியான ஒரு நட்சத்திரம்தான். யூ-டியூப் மூலம் பிரபலமாகிச் சின்னத்திரைக்கு வந்திருக்கும் வைஷ்ணவியுடன் ஒரு பேட்டி.

சுட்டிப் பெண்ணா மட்டுமல்ல, பார்க்க குட்டிப் பெண்ணாவும் இருக்கீங்க, என்ன படிக்கிறீங்க?

அய், ஜாலி! நெறைய பேர் இப்படித்தான் கேட்கிறாங்க. ஆனா, நான் ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சிருக்கேன். கேம்பஸ் இன்டர்வியூல வேலைகூட கெடைச்சது. வேலைக்குப் போயிட்டு இருந்த கொஞ்ச நாள்லயே, கடவுள் யூ-டர்ன் போட்டு என்னை நடிப்புத் துறைக்குள்ள தள்ளிட்டார். இதுவும் நல்லாத்தான் இருக்கு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE